இது சித்திரங்கள் சிரிக்கும் மலர் . கவிதைகள் பூக்கும் மலர் . சிந்தையில் உதித்திடும் சொல்பூக்களை தொடுத்து மாலையாக்கி , ரசனை மிகு மக்களுக்கு சூட்டி மனம் மகிழ வாசம் வீசும் மலர். நுகருங்கள் மலரிதனை. நவிலுங்கள் நும் கருத்தை.
Tuesday, 20 November 2012
Tuesday, 24 July 2012
வெறுமை
நிலவில்லா நீள் நெடுவானம்
வெறிச்சோடி இருப்பதைப் போல
நீயில்லா நாட்களில்
வெறுமையாகிப் போகிறது
என் வாழ்க்கை !
சிறு புன்னகை தவழும்
உன் பூமுகம் காணாப் பொழுதுகளில்
சிறகொடிந்து போகிறது
என் கற்பனைப் பறவை !
உன் காந்தக் கண்களில்
நான் தொலைந்து போன நாள் முதலாய்
தன் கனவுகளைத் தொலைக்கின்றன
என் உறக்க நேரங்கள் !
வருகிறேன் எனச் சொல்லி
வாராமல் போன காலம் ...
காத்திருத்தளிலேயே நீண்டுபோயின
என் நெடிய பொழுதுகள் !
உன்பிரிவு தாங்காமல்
புழுங்கி மனம் தவிக்கையிலே
பனி நீரில் குளித்துவிட்ட புது ரோஜா பூவுக்கும்
வியர்த்து வடிவதாய்த்தான்
எனக்குத் தோணுதடி !
இனி ஒருபொழுதும்
எனை நெருங்க மாட்டாய் நீ
என அறிந்த நாள் முதலாய்
என் பட்டப் பகலனைத்தும்
நட்டநடுநிசியைப் போல்
இருட்டாகிப் போகுதடி!
Tuesday, 24 April 2012
பயம்
பயம்
தேர்வுகள் முடிந்து
விடுமுறை விட்டும் கூட
மாணவர்கள் கண்களில்
தேங்கிக் கிடக்கின்றது
தேர்வு முடிவின் பயம் ...!
Tuesday, 17 April 2012
முக நூல் காதலி ...
முக நூல் காதலி ...
உனது மனமென்னும் FACE BOOK ல்
சைன் அப் நான் செய்திடவே துடிக்கின்றேன்!
பெயர் ,பிறந்த நாளுடன் கேட்டுவிட்ட விபரங்கள்
அனைத்தும் நான் கொடுத்துவிட்டேன்!
குழப்பியடிக்கின்ற வார்த்தைகள் டைப் செய்தே
சப்மிட் நான் செய்து விட்டேன் ....
பாஸ் வேர்டாய் என்னுயிரை
தயங்காமல் தந்துவிட்டேன் ...!
அப்போது தெரியாது ஒவொரு முறையும்
நான் சைன் இன் செய்தாலும்
பாஸ் வேர்டை நீ கேட்டு வாங்கிடுவாய் என்று ...!
என் மனதில் தோன்றுகின்ற
கொஞ்சு மொழி அனைத்தும் நான்
டைப் செய்து போஸ்ட் செய்தால்
வேஸ்டாகிப் போகுதடி ...போஸ்டாக மறுக்குதடி...!
இருந்தாலும் எனக்கிங்கே இடையிடையே ஓர் மகிழ்ச்சி!
உன்தங்கை எனக்காய்தான் FRIEND REQUEST கொடுக்கின்றாள்...
அக்செப்ட் நான் செய்திடவா ...?NOT NOW ஐ க்ளிக்கிடவா ...?
என் ஆசைகள் அத்தனையும் ஆல்பமாக்கப் பார்க்கின்றேன்...!
அப்லோடே ஆகாமல் அடம் அடமாய்ப் பிடிக்குதடி!
என் மன WALL ல் நான் செய்த போஸ்டெல்லாம்
உன் WALL ல் ஷேர் செய்யும் வேளையிலே
நெட் கனெக்ஷன் கட்டாகி என் கழுத்தை அறுக்குதடி..!
உனக்காக என் அக்கவுண்டில் PAGES பல துவங்கிவிட்டேன்...!
க்ரூப்ஸ் பலதும் துவங்கிவிட்டேன்!
உன் பதிலைப் பெறுவதற்காய் NOTIFICATION ஐகானை
அடிக்கடி நான் முறைத்து ஏமாந்து போகின்றேன்...!
வருகின்ற NEWS FEED உன் போஸ்டைத் தவிர நிதம்
தொண்ணூறு போஸ்ட் வந்தே துவம்சம் எனைப் பண்ணுதடி..!
புன்னகை ததும்பும் உன் புகைப் படம் ஒன்றை நீ
அட்டாச்மெண்ட் செய்திட்ட மெசேஜ் உடனே அனுப்பிவிடு...!
அடியே...நீ அதுவுந்தான் செய்ய மறுத்துவிட்டால் ...
பாஸ் வேர்டை மறந்துவிட்டே LOG OUT நான் செய்திடுவேன்!
SITHIRAKKAVIMALAR(சித்திரக்கவிமலர்): சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை ... படிக்க நீங்க ...
SITHIRAKKAVIMALAR(சித்திரக்கவிமலர்): சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை ... படிக்க நீங்க ...: சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை ... படிக்க நீங்க ரெடியா? சுந்தரர் ஒரு நாள் மாலை நேரம்.. திருத்துறையூரில் கோயில் கொண்டிருந்த சிஷ்ட குர...
SITHIRAKKAVIMALAR(சித்திரக்கவிமலர்): சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை ... படிக்க நீங்க ...
SITHIRAKKAVIMALAR(சித்திரக்கவிமலர்): சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை ... படிக்க நீங்க ...: சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை ... படிக்க நீங்க ரெடியா? சுந்தரர் ஒரு நாள் மாலை நேரம்.. திருத்துறையூரில் கோயில் கொண்டிருந்த சிஷ்ட குர...
சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை .
சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை ... படிக்க நீங்க ரெடியா?
சுந்தரர் ஒரு நாள் மாலை நேரம்.. திருத்துறையூரில் கோயில் கொண்டிருந்த சிஷ்ட குருநாதரை தரிசித்து, பின்னர் அங்கிருந்து அட்ட வீரட்டானத் தலங்களுள் ஒன்றான திருஅதிகை வீரட்டானம் கோயில் கொண்ட ஈசனை தரிசிக்க நினைத்து தற்போது புதுப்பேட்டை என்று அழைக்கப் படும் ரோஜபுரியின் வழியாக பயணம் மேற்கொண்டார். ஆனால் ,திரு நாவுக்கரசர் என்று அறியப்படும் அப்பர் பெருமானார் உழவாரத் திருப்பணி செய்து வரும் அந்த தலத்தை தம் கால்களால் தீண்டலாகாது என்று கருதினார்.எனவே ரோஜாபுரியை அடுத்துள்ள கேடிலம்பாக்கம் என்ற சிற்றூரில் உள்ள சித்தவடமடம் என்கின்ற வழிப் போக்கர் தங்கும் சத்திரத்தில் தங்கிச் செல்ல நினைத்தார். இரவு உணவுக்குப் பிறகு தெருவில் உள்ள திண்ணையில் படுத்து உறங்கினார் .அப்போது..
திண்ணையிலே உறங்கிக் கொண்டிருந்த சுந்தரரின் தலையிலே ஏதோ பட்டதைப் போலிருந்தது . கண் விழித்துப் பார்த்தபோது அவரது தலையிலே கால் படுமாறு ஒரு வயதான மனிதர் படுத்திருந்தார்!பாவம் பெரியவர் தூக்கத்திலே தெரியாமல் கால் பட்டிருக்கிறது என்று நினைத்து சற்று தள்ளிப் பொய் படுத்துக் கொண்டார் ! .மீண்டும் உறங்கிப் போனார். .
சிறிது நேரம் கடந்திருக்கும்.மீண்டும் அவரது தலையிலே மீண்டும் ஏதோ குறு குறு ப்பதைப் போல ஒரு உணர்வு .கண் விழித்துப் பார்த்தால் ... மீண்டும் அதே பெரியவர் .சற்றே அலுப்புடன் நகர்ந்து அடுத்த திண்ணையில் சென்று படுத்தார் சுந்தரர் நெடுந்தூரம் நடந்த பயணக் களைப்பிலே மீண்டும் கண்கள் சொருக உறங்கிப் போனார்.
ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் தலையிலே ஏதோ ஒரு உணர்வு . கண்விழித்துப் பார்த்தால் மீண்டும் அதே பெரியவர் இந்தத் திண்ணையிலும். வந்ததே சுந்தரருக்குக் கோபம். அந்தப் பெரியவரைப் பார்த்து,"யாரையா கிழவரே நீர் ? என்னை நிம்மதியாய் உறங்கவிடாமல் இப்படிப் படுத்தி எடுக்கின்றீரே ! யார் நீர்? "என்று வினவினார் . அதற்கு அந்தப் பெரியவர் ," என்னைத் தெரியவில்லையா ?"என்று கேட்டு சற்றே உட்புறமாக நோக்கிச் சென்று மறைந்தார்
.அந்த இடத்திலே ரிஷப வாகனத்தில் தன மனையாள் உமையவளோடு சிவபெருமான் காட்சியளிக்க ,பரவசப் பட்டுப் போன சுந்தரர் 'தம்மானை அறியாத சாதியருளரோ...'எனத் துவங்கும் பதிகத்தைப் பாடினார் .திருவதிகை இறைவனைநினைந்துபாடியஅப்பதிகத்தைஇங்குவைத்துப்பாடியமையால் இது வைப்புத் தலமாகும்.
இறைவன் காட்சி தந்த இடமே தற்போதைய மூலஸ்தானம் என்று அழைக்கப் படும் கருவறை ஆகும் .இவ்வாறு சுந்தரருக்கு தமது இறைவன் தமது திருவடி சூட்டிய தலமாகியசித்தவடமடத்தின் பெருமைகளையும் கோவில் அமைப்பையும் அடுத்த முறை பார்ப்போமே!
தொடரும்....
Monday, 16 April 2012
சிற்றம்பலனாதர்
சிற்றம்பலனாதர்
சித்தவட மடம்..பண்ருட்டிக்கு அருகாமையில் உள்ள புதுப்பேட்டைக்கு மிக அருகில் இறக்கும் கொட்டலாம்பாக்கம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது இத்தலம்.. சமயக் குரவர்கள் நால்வர்களுள் ஒருவரான சுந்தரர்க்கு திருவடி சூட்டிய தலம். அட்டவீரட்டானங்களுள் ஒன்றான திரு அதிகைக்கு அண்மையில் அமைந்துள்ள ஊர்."தம்மானை அறியாத சாதியருளரோ "என்று சுந்தரர் மனம் நெகிழ்ந்து பதிகம் பாடிச் சிறப்பித்த வைப்புத்தலம்....!
இனி வரும் காலங்களில் இந்தக் கோவிலின் தல வரலாறு ..சிறப்புகள் திருப்பணி செய்யும் விபரங்களை இந்த வலைப் பூவில் பதிய இருக்கிறேன்! இணைந்திருங்கள்..! சித்திரக்கவிமலருடன்...!
சித்தவட மடம்..பண்ருட்டிக்கு அருகாமையில் உள்ள புதுப்பேட்டைக்கு மிக அருகில் இறக்கும் கொட்டலாம்பாக்கம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது இத்தலம்.. சமயக் குரவர்கள் நால்வர்களுள் ஒருவரான சுந்தரர்க்கு திருவடி சூட்டிய தலம். அட்டவீரட்டானங்களுள் ஒன்றான திரு அதிகைக்கு அண்மையில் அமைந்துள்ள ஊர்."தம்மானை அறியாத சாதியருளரோ "என்று சுந்தரர் மனம் நெகிழ்ந்து பதிகம் பாடிச் சிறப்பித்த வைப்புத்தலம்....!
இனி வரும் காலங்களில் இந்தக் கோவிலின் தல வரலாறு ..சிறப்புகள் திருப்பணி செய்யும் விபரங்களை இந்த வலைப் பூவில் பதிய இருக்கிறேன்! இணைந்திருங்கள்..! சித்திரக்கவிமலருடன்...!
Wednesday, 28 March 2012
Tuesday, 13 March 2012
அன்னை
அன்னை
அன்பின் வடிவம்
ஆற்றலின் மூலம்
இதயத்துடிப்பு-என் இன்னுயிர்
ஈன்ற நல தேவதை- எனை
உயிராய்க் காப்பவள்
ஊட்டும் பாலில் உயிரைச் சேர்ப்பவள்
எழில் சிரிப்பினிலே எம் பசி தீர்ப்பவள்
ஏழுலகுக்கீடாய் இத்தரணியில் பூத்தவள்
ஐய்யிரண்டாண்டுகள் உதரம் தனிலெனைத் தாங்கியிருந்தவள்
ஒருபொழுதும் எனைப் பிரியாதிருப்பவள்
ஓடி ஓடியே எனக்காய் உழைப்பவள்
ஒளடதமாய் என் ஊண் உயிர் காப்பவள் .......
அழகே உருவாய் கடவுள் படைத்த ஒரு வரிக் கவிதை
அவளே...அவளே..!என் தாயவளே!
Wednesday, 8 February 2012
மரணம்
மரணம்
உயிர்
தன் உடலென்னும் கூட்டைவிட்டுக்
கிளம்பிச் செல்லும்
திரும்பிவராத் தீர்த்த யாத்திரை!
வாழ்க்கை என்னும் வேடந்தாங்கல் விட்டு
உயிர்ப்பறவை தேடியோடும்
கண்காணா தூரதேசம்!
அரசனையும்
ஆண்டியையும்
சமமாக்கும்
காலதேவனின் கடைசி அஸ்திரம்!
கடனைத் திருப்பித்தரமுடியா
கடன்காரர்கள் எடுக்கும்
கடைசி முடிவு !
காதல் தோல்வி கண்ட
கன்னியரும் காளையரும்
தேடியோடும்
கடைசிப் புகலிடம்!
கனவுகளேதும்
நடுவே வந்து
கலங்க வைக்கா
கடைசி உறக்கம் !
வாழ்க்கை என்னும்
முழுநீள நாவலின்
முற்றுப் புள்ளி!
மலடியின் தாலாட்டு
மலடியின் தாலாட்டு
வாவாஎன் கண்மணியே
வந்தாடும் கட்டழகே !
வாராது வந்துநின்ற
வடிவழகுப் பெட்டகமே !
உந்தை எனக்களித்த
மணவாழ்வுப் பரிசான
சந்தனப் பேழையடா
சதிராடி வந்திடடா!
பொக்கைவாய்ச் சிரிப்பினிலே
பறிகொடுத்த என்னுள்ளம்
தக்கையாகிப் பறக்குதடா
தாவித்தாவிக் குதிக்குதடா !
மலடி மலடிஎன
இவ்வுலகம் எனையழைக்க
வலம்புரிச் சங்கென நீ
வந்துவிட்டாய் கலிதீர்க்க!
உன்னைப் பிரிந்தாலோ
உறங்காது என்னுள்ளம்
கண்ணிமையை மூடாது
காத்திடுவேன் வா வாவா !
Monday, 16 January 2012
Subscribe to:
Posts (Atom)








