உலகில் உயிர்கள் நடமாட
வேண்டும் காற்றும் நீருமடா
அதுபோல் பொறிகள் இயங்கிடவே
நிச்சயம் வேண்டும் மின்சாரம் .
விளக்கு எரித்திட மின்சாரம்
உணவைச் சமைத்திட மின்சாரம்
மருந்தைக் காத்திட மின்சாரம்
அதுவே வாழ்வின் ஆதாரம் .
ரயிலை இயக்கிட மின்சாரம்
திரைப்படம் பார்த்திட மின்சாரம்
ரோபோ எனுமோர் இயந்திர மனிதன்
நடந்திட வேண்டும் மின்சாரம் .
மின்சாரத்தின் பயன் தன்னை
சொல்லிட ஓர்நாள் போதாது
மின்சாரம் மட்டும் இலையென்றால்
உலகில் வாழ்வே நின்றுவிடும்.
இத்தகு பல்பயன் தருகின்ற
மின்சாரத் தினைநீர் போல
செலவு செய்திடல் முறையாமோ ?
சிக்கனம் செய்திடல் நன்றன்றோ !
வீணாய் ஓடிடும் மின்விசிறி
ஒளியை உமிழ்ந்திடும் மின்விளக்கு
யாரும் காணாத் தொலைகாட்சி
இவையனைத்தின் இயக்கம் நிறுத்திடுவீர்
இதுபோல் இன்னும் பலஉண்டு
ஒவ்வொன் றாகநீ கண்டு
மின்சிக் கனம்நீ செய்திட்டால்
நாடும்வீடும் உனை வாழ்த்தும் !
வேண்டும் காற்றும் நீருமடா
அதுபோல் பொறிகள் இயங்கிடவே
நிச்சயம் வேண்டும் மின்சாரம் .
விளக்கு எரித்திட மின்சாரம்
உணவைச் சமைத்திட மின்சாரம்
மருந்தைக் காத்திட மின்சாரம்
அதுவே வாழ்வின் ஆதாரம் .
ரயிலை இயக்கிட மின்சாரம்
திரைப்படம் பார்த்திட மின்சாரம்
ரோபோ எனுமோர் இயந்திர மனிதன்
நடந்திட வேண்டும் மின்சாரம் .
மின்சாரத்தின் பயன் தன்னை
சொல்லிட ஓர்நாள் போதாது
மின்சாரம் மட்டும் இலையென்றால்
உலகில் வாழ்வே நின்றுவிடும்.
இத்தகு பல்பயன் தருகின்ற
மின்சாரத் தினைநீர் போல
செலவு செய்திடல் முறையாமோ ?
சிக்கனம் செய்திடல் நன்றன்றோ !
வீணாய் ஓடிடும் மின்விசிறி
ஒளியை உமிழ்ந்திடும் மின்விளக்கு
யாரும் காணாத் தொலைகாட்சி
இவையனைத்தின் இயக்கம் நிறுத்திடுவீர்
இதுபோல் இன்னும் பலஉண்டு
ஒவ்வொன் றாகநீ கண்டு
மின்சிக் கனம்நீ செய்திட்டால்
நாடும்வீடும் உனை வாழ்த்தும் !