இது சித்திரங்கள் சிரிக்கும் மலர் . கவிதைகள் பூக்கும் மலர் . சிந்தையில் உதித்திடும் சொல்பூக்களை தொடுத்து மாலையாக்கி , ரசனை மிகு மக்களுக்கு சூட்டி மனம் மகிழ வாசம் வீசும் மலர். நுகருங்கள் மலரிதனை. நவிலுங்கள் நும் கருத்தை.
Wednesday, 8 October 2014
Tuesday, 23 September 2014
Wednesday, 3 September 2014
எதிரி
என் எண்ணங்களே
என் முதல் எதிரி.
ஆம்!
என்னதான் கடிவாளமிட்டு
கம்பால் அடித்தாலும்,
எதிர்காலத்திற்கு
என்னை செல்லவொட்டாமல்,
நிகழ் காலத்துக்கும் மீளாமல்
நான் கசந்து வெறுத்துவிட்ட
என் கடந்த காலத்திற்கே
என்னை இழுத்துச் செல்லும்
என் மனக்குதிரையை
என் எதிரி என்று சொல்லாமல்
வேறென்ன சொல்ல?
என் முதல் எதிரி.
ஆம்!
என்னதான் கடிவாளமிட்டு
கம்பால் அடித்தாலும்,
எதிர்காலத்திற்கு
என்னை செல்லவொட்டாமல்,
நிகழ் காலத்துக்கும் மீளாமல்
நான் கசந்து வெறுத்துவிட்ட
என் கடந்த காலத்திற்கே
என்னை இழுத்துச் செல்லும்
என் மனக்குதிரையை
என் எதிரி என்று சொல்லாமல்
வேறென்ன சொல்ல?
Monday, 25 August 2014
மயக்கும் புன்னகை
மயக்கும் புன்னகை
அழகாய்ச் சிரிக்கும் அற்புதச் சிறுவன் .
நீர்வர்ணம் தனில் தூரிகை தோய்த்தே
கை முறைத் தாளில் களிப்புடன் வரைந்தேன்
தங்கக் கூந்தல் முன் நெற்றியில் புரள
நீல விழிகளில் குறும்பு மின்ன
ரோஜாக் கன்னம் நாணம் காட்ட
செவ்விதழ் விரிந்து முத்துகள் தெரிய
தன் அற்புதப் புன்னகை கொண்டு நம்முள்ளம் மயக்கும்
உள்ளம்கவரும் கள்வனை வரைந்தேன்
கண்டோர் புகழ நெஞ்சு நிறைந்தேன்.
Sunday, 24 August 2014
நீர்க்குடம் ஏந்தும் பாற்குடம்
நீர்க்குடம் ஏந்தும் பாற்குடம்
தண்ணீர் கொண்டு செல்வதற்காக பானை சுமந்து வந்த பெண் பொய்கையிலே நீராடி முடித்த கையேடு தான் அணிந்த ஒற்றை வெண்ணிற ஆடை ஈரம் கொண்ட மேனியிலே ஒட்டியும் ஒட்டாமலும் ,பட்டும் படாமலும் அவள் மேனியழகை இலை மறை காயாய் மறைத்தும் மறைக்காமலும் வெளிப் படுத்தும் காட்சி... அடடா... !
ரசித்து ரசித்து வரைந்த இவ்வோவியம் ....!
அவள் காங்களில் பாருங்கள்...குறும்பின் மின்னல்...
இதழ்களில் ..ஒய்யாரக் குறுநகை....!
கன்னங்களில் வெட்கச் செந்தூரம்.....!
காமக் கண்ணோடு பாராமல் கலைக் கண்ணோடு பாருங்கள்...!
எனக்கு மட்டுமல்ல ...!
என் தாயாருக்கும் கூட நான் கஷ்டப்பட்டு.. இல்லை... இல்லை...!
நான் இஷ்டப்பட்டு வரைந்த இவ்வோவியம் ...மிக மிக பிடிக்குமாம் ...!

Tuesday, 19 August 2014
நீராடும் தாமரை
நீராடும் தாமரை
இதுவும் நான் ஆரம்ப காலங்களில் வரைந்த ஓவியங்களுள்
எனக்கு மட்டுமல்ல ...என் உறவினர்களுக்கும் ...
மிகப் பிடித்தமான ஓவியம்.
நீர் வர்ணம் கொண்டு தீட்டப்பட்டது...
செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா என்ற
சசிரேகாவின் தேன் குரல் பாடலும்
நடிகை நிரோஷாவும் பிரபலமான நேரம் ....
எனது கற்பனையில் தீட்டிய ஓவியம்....
நடிகை நிறோஷாவின் சாயலும் இருப்பதாகக் கூறுவார்கள்.
அப்படி ஏதாவது தெரிகிறதா பாருங்கள்...!
கோதண்ட ராமன்
கோதண்ட ராமன் ...
நான் தீட்டிய ஓவியங்களுள் ரசித்து தீட்டிய ஓவியம்.....
மிகவும் பிடித்த ஓவியங்களுள் ஒன்று.....
கை முறைதாளில் நீர் வர்ணம் கொண்டு தீட்டியது.
எனது 19 ஆம் வயதில் (1988) வரைந்தது ....
எனக்கு பல பாராட்டுகளை வரிக்குவித்த படம்.
வண்ணங்களை பற்றிய எந்த அறிமுகமும் இல்லாமல்
நானே சுயமாய் தீட்டியது ....
இந்த முத்து தீட்டிய முத்துராமனை
சீதைக்குப் பிடிக்கிறதோ இல்லையோ ...
முத்துக்குமரனாகிய எனக்கு மிகவும் பிடிக்கும்.

Subscribe to:
Posts (Atom)