Tuesday, 13 March 2012

அன்னை




அன்னை    
அன்பின் வடிவம் 
ஆற்றலின் மூலம்
இதயத்துடிப்பு-என் இன்னுயிர்
ஈன்ற நல தேவதை- எனை 
உயிராய்க் காப்பவள் 
ஊட்டும் பாலில் உயிரைச் சேர்ப்பவள்
எழில் சிரிப்பினிலே எம் பசி தீர்ப்பவள்
ஏழுலகுக்கீடாய் இத்தரணியில் பூத்தவள்
ஐய்யிரண்டாண்டுகள் உதரம் தனிலெனைத் தாங்கியிருந்தவள்
ஒருபொழுதும் எனைப் பிரியாதிருப்பவள்
ஓடி ஓடியே எனக்காய் உழைப்பவள்
ஒளடதமாய் என் ஊண் உயிர் காப்பவள் .......
அழகே உருவாய் கடவுள் படைத்த ஒரு வரிக் கவிதை 
அவளே...அவளே..!என் தாயவளே! 

No comments:

Post a Comment