Tuesday, 24 April 2012

பயம்

பயம் 

தேர்வுகள் முடிந்து
விடுமுறை விட்டும்  கூட 
மாணவர்கள் கண்களில் 
தேங்கிக் கிடக்கின்றது 
தேர்வு முடிவின் பயம் ...!

கரையாத வண்ணம்

அடித்துப் பெய்த பெரு மழையில்
 நனைந்தும் கூட 
வண்ணங்கள் கரையவில்லை...
பட்டாம்பூச்சியின் இறக்கைகளில்....! 

Tuesday, 17 April 2012

முக நூல் காதலி ...

முக நூல் காதலி ...




உனது   மனமென்னும் FACE  BOOK  ல் 
சைன் அப் நான் செய்திடவே துடிக்கின்றேன்!
பெயர்  ,பிறந்த நாளுடன் கேட்டுவிட்ட விபரங்கள் 
அனைத்தும் நான் கொடுத்துவிட்டேன்!
குழப்பியடிக்கின்ற வார்த்தைகள் டைப் செய்தே
சப்மிட் நான் செய்து விட்டேன் ....
 பாஸ் வேர்டாய் என்னுயிரை 
தயங்காமல் தந்துவிட்டேன் ...!
அப்போது தெரியாது ஒவொரு முறையும்
 நான் சைன் இன் செய்தாலும் 
 பாஸ் வேர்டை நீ கேட்டு வாங்கிடுவாய் என்று ...! 
என் மனதில் தோன்றுகின்ற 
கொஞ்சு மொழி அனைத்தும் நான்   
டைப் செய்து போஸ்ட் செய்தால் 
வேஸ்டாகிப் போகுதடி ...போஸ்டாக மறுக்குதடி...!
இருந்தாலும் எனக்கிங்கே இடையிடையே ஓர் மகிழ்ச்சி!
உன்தங்கை எனக்காய்தான் FRIEND REQUEST கொடுக்கின்றாள்...
அக்செப்ட் நான் செய்திடவா ...?NOT NOW ஐ க்ளிக்கிடவா ...?
என் ஆசைகள் அத்தனையும் ஆல்பமாக்கப் பார்க்கின்றேன்...!
அப்லோடே ஆகாமல் அடம் அடமாய்ப் பிடிக்குதடி!
என் மன WALL ல் நான் செய்த போஸ்டெல்லாம் 
உன் WALL ல் ஷேர் செய்யும் வேளையிலே 
நெட் கனெக்ஷன் கட்டாகி என் கழுத்தை அறுக்குதடி..!
உனக்காக என் அக்கவுண்டில் PAGES பல துவங்கிவிட்டேன்...!
க்ரூப்ஸ் பலதும் துவங்கிவிட்டேன்! 
உன் பதிலைப் பெறுவதற்காய் NOTIFICATION ஐகானை 
அடிக்கடி நான் முறைத்து ஏமாந்து போகின்றேன்...!
வருகின்ற NEWS  FEED உன் போஸ்டைத் தவிர நிதம் 
தொண்ணூறு போஸ்ட் வந்தே துவம்சம் எனைப் பண்ணுதடி..!
புன்னகை ததும்பும் உன் புகைப் படம் ஒன்றை நீ 
அட்டாச்மெண்ட் செய்திட்ட மெசேஜ் உடனே அனுப்பிவிடு...!
 அடியே...நீ அதுவுந்தான் செய்ய மறுத்துவிட்டால் ...
பாஸ் வேர்டை மறந்துவிட்டே LOG  OUT நான் செய்திடுவேன்!  




SITHIRAKKAVIMALAR(சித்திரக்கவிமலர்): சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை ... படிக்க நீங்க ...

SITHIRAKKAVIMALAR(சித்திரக்கவிமலர்): சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை ... படிக்க நீங்க ...: சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை ... படிக்க நீங்க ரெடியா? சுந்தரர் ஒரு நாள் மாலை நேரம்.. திருத்துறையூரில் கோயில் கொண்டிருந்த சிஷ்ட குர...

SITHIRAKKAVIMALAR(சித்திரக்கவிமலர்): சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை ... படிக்க நீங்க ...

SITHIRAKKAVIMALAR(சித்திரக்கவிமலர்): சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை ... படிக்க நீங்க ...: சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை ... படிக்க நீங்க ரெடியா? சுந்தரர் ஒரு நாள் மாலை நேரம்.. திருத்துறையூரில் கோயில் கொண்டிருந்த சிஷ்ட குர...

முக நூல் கவிதை

முக நூல் கவிதை
  

சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை .

            சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை ... படிக்க நீங்க ரெடியா?

           சுந்தரர் ஒரு நாள் மாலை நேரம்.. திருத்துறையூரில் கோயில் கொண்டிருந்த சிஷ்ட குருநாதரை தரிசித்து, பின்னர் அங்கிருந்து அட்ட வீரட்டானத் தலங்களுள் ஒன்றான திருஅதிகை வீரட்டானம் கோயில் கொண்ட ஈசனை தரிசிக்க நினைத்து  தற்போது புதுப்பேட்டை என்று அழைக்கப் படும் ரோஜபுரியின் வழியாக பயணம் மேற்கொண்டார். ஆனால் ,திரு நாவுக்கரசர் என்று அறியப்படும் அப்பர் பெருமானார் உழவாரத்  திருப்பணி  செய்து  வரும்  அந்த  தலத்தை தம் கால்களால் தீண்டலாகாது என்று கருதினார்.எனவே ரோஜாபுரியை அடுத்துள்ள கேடிலம்பாக்கம் என்ற சிற்றூரில் உள்ள சித்தவடமடம் என்கின்ற வழிப் போக்கர் தங்கும் சத்திரத்தில் தங்கிச் செல்ல நினைத்தார். இரவு உணவுக்குப் பிறகு தெருவில் உள்ள திண்ணையில்  படுத்து உறங்கினார் .அப்போது..             
           திண்ணையிலே உறங்கிக் கொண்டிருந்த சுந்தரரின் தலையிலே ஏதோ பட்டதைப் போலிருந்தது . கண் விழித்துப் பார்த்தபோது அவரது தலையிலே கால் படுமாறு ஒரு வயதான மனிதர் படுத்திருந்தார்!பாவம் பெரியவர் தூக்கத்திலே தெரியாமல் கால் பட்டிருக்கிறது என்று நினைத்து சற்று தள்ளிப் பொய் படுத்துக் கொண்டார் !  .மீண்டும் உறங்கிப் போனார். .  
           சிறிது நேரம் கடந்திருக்கும்.மீண்டும் அவரது தலையிலே மீண்டும் ஏதோ குறு குறு ப்பதைப் போல ஒரு உணர்வு .கண் விழித்துப் பார்த்தால் ... மீண்டும் அதே பெரியவர் .சற்றே அலுப்புடன் நகர்ந்து அடுத்த திண்ணையில் சென்று படுத்தார் சுந்தரர் நெடுந்தூரம் நடந்த பயணக் களைப்பிலே மீண்டும் கண்கள் சொருக உறங்கிப் போனார்.
           ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் தலையிலே ஏதோ ஒரு உணர்வு . கண்விழித்துப் பார்த்தால் மீண்டும் அதே பெரியவர் இந்தத் திண்ணையிலும். வந்ததே சுந்தரருக்குக் கோபம். அந்தப் பெரியவரைப் பார்த்து,"யாரையா கிழவரே நீர் ? என்னை நிம்மதியாய் உறங்கவிடாமல் இப்படிப் படுத்தி எடுக்கின்றீரே ! யார் நீர்? "என்று வினவினார் . அதற்கு அந்தப் பெரியவர் ," என்னைத் தெரியவில்லையா ?"என்று கேட்டு சற்றே உட்புறமாக நோக்கிச் சென்று மறைந்தார் 
            .அந்த இடத்திலே ரிஷப வாகனத்தில் தன மனையாள் உமையவளோடு சிவபெருமான் காட்சியளிக்க ,பரவசப் பட்டுப் போன சுந்தரர் 'தம்மானை அறியாத சாதியருளரோ...'எனத் துவங்கும் பதிகத்தைப் பாடினார் .திருவதிகை இறைவனைநினைந்துபாடியஅப்பதிகத்தைஇங்குவைத்துப்பாடியமையால் இது வைப்புத் தலமாகும்.
            இறைவன் காட்சி தந்த இடமே தற்போதைய மூலஸ்தானம் என்று அழைக்கப் படும் கருவறை ஆகும் .இவ்வாறு சுந்தரருக்கு தமது இறைவன் தமது திருவடி சூட்டிய தலமாகியசித்தவடமடத்தின் பெருமைகளையும் கோவில் அமைப்பையும் அடுத்த முறை   பார்ப்போமே! 
                                                                              


                                                                                                                        தொடரும்.... 

Monday, 16 April 2012

சிற்றம்பலனாதர்

சிற்றம்பலனாதர் 
சித்தவட மடம்..பண்ருட்டிக்கு அருகாமையில் உள்ள  புதுப்பேட்டைக்கு மிக அருகில் இறக்கும் கொட்டலாம்பாக்கம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது இத்தலம்.. சமயக்  குரவர்கள்  நால்வர்களுள் ஒருவரான சுந்தரர்க்கு திருவடி சூட்டிய தலம். அட்டவீரட்டானங்களுள் ஒன்றான திரு அதிகைக்கு அண்மையில்  அமைந்துள்ள ஊர்."தம்மானை அறியாத சாதியருளரோ "என்று சுந்தரர் மனம் நெகிழ்ந்து பதிகம் பாடிச் சிறப்பித்த வைப்புத்தலம்....! 


இனி வரும் காலங்களில் இந்தக் கோவிலின் தல  வரலாறு ..சிறப்புகள் திருப்பணி செய்யும் விபரங்களை இந்த வலைப் பூவில் பதிய இருக்கிறேன்!  இணைந்திருங்கள்..!                  சித்திரக்கவிமலருடன்...!