Wednesday, 8 February 2012

மரணம்

மரணம் 

உயிர் 
தன் உடலென்னும் கூட்டைவிட்டுக்
கிளம்பிச் செல்லும் 
திரும்பிவராத்  தீர்த்த யாத்திரை! 

வாழ்க்கை  என்னும்  வேடந்தாங்கல்  விட்டு 
உயிர்ப்பறவை தேடியோடும் 
கண்காணா தூரதேசம்!

அரசனையும் 
ஆண்டியையும் 
சமமாக்கும் 
காலதேவனின் கடைசி அஸ்திரம்!

கடனைத் திருப்பித்தரமுடியா 
கடன்காரர்கள் எடுக்கும்
கடைசி முடிவு ! 

காதல் தோல்வி கண்ட  
கன்னியரும் காளையரும் 
தேடியோடும் 
கடைசிப் புகலிடம்!

கனவுகளேதும் 
நடுவே வந்து 
கலங்க வைக்கா 
கடைசி உறக்கம் !

வாழ்க்கை என்னும் 
முழுநீள நாவலின் 
முற்றுப் புள்ளி! 

No comments:

Post a Comment