Wednesday, 28 December 2011

முத்திரை.

முத்திரை.
இசை, நடனம், ஓவியம்
ஆகிய மூன்றினையும் ஒன்றிணைத்து
முதன்முதலாய் ஒரு அரங்கேற்றம்
காகித மேடையில் நர்த்தனமாடுகின்றன
விரல்கள்...
பாரதி என்றொரு காவியம் ...
ஓவியமாய்ப் பிறக்கிறது!
இது ஓவியக் கலையில் புதியதொரு முயற்சி
பரதத்தில் கைகள் பிடிப்பது முத்திரை
இசை ஓவியம்தனில்
 உம் விரல்கள் படைத்தன தனி முத்திரை.
முத்திரை படைத்த சிற்பியே...! ஜெயராமரே...!
வாழ்க நீவிர்!


                       இது தவிலின் இசைக்கேற்றவாறு தனது கரங்களையும், விரல்களையும் நடனம் ஆடுகின்ற லாவகத்தோடு அசைத்து ஒரு சார்க்கோல் (கரித்துண்டு)கொண்டு மகா கவி பாரதி எனும் அற்புத ஓவியத்தை படைத்த சிற்பி ஜெயராமன் (பாண்டிச்சேரி பாரதியார் கவின் கலைக் கல்லூரியின் முதல்வர்)அவர்களைக் கண்டு வியந்துபோன என் உள்ளம் பாடிய கவிதை.

Sunday, 18 December 2011




நான் தீட்டிய சில இயற்கைக் காட்சிகள் சில உங்கள் பார்வைக்கு ...

Saturday, 17 December 2011

வெறுப்பு!




முல்லைப் பெரியாற்றின் குறுக்கே அணைகட்டி 
இல்லை நீரென்றே யுரைக்கின்றீர் -தொல்லை
தருவதற்கா அண்டைமா நிலமானீர் எமக்கு 
வருகிறதே உம்மேல் வெறுப்பு!

Thursday, 15 December 2011

மழை ரோஜா

 மழை ரோஜா

 கண்ணுக்கு எட்டிய தூரம் வரை 
கார்மேகம் மட்டுமே கவி  பாடுகிறது!
வெண் மேகம் எதுவுமின்றி 
வெறிச்சோடிக் கிடக்கிறது வானம்! 
 கவிழ்கிறது காரிருள் !
வியப்பினிலே விரிகின்றன விழிகள்...!
முள்ளில்லா  செடியினிலே ரோஜாவொன்று 
புதியதாய்   பூக்கிறது! 
காலையிலே  பூக்கும் ரோஜா காரிருளில் பூத்திடுமோ ?
கண்ணைக் கட்டுகிறது எனக்கு!
திகைத்து   நான்  நிற்கையிலே  திடீரென தூறல் மழை 
அடடா   என்ன  இது! 
புதியதாய் பூத்த பூவதனை
புன்னகையோடு வரவேற்க 
பன்னீர் தெளிக்கிறதோ வானம் !
இரு கார் மேகக் கரம் குலுக்கி
 மின்னல்  வெட்டிச் சிரித்து 
இடி இடி எனச் சிரித்துக் கொண்டாடுகிறது  இயற்கை!
வீசும்  காற்றிலே வேகமாகத் தலை விரித்தாடுகின்றன 
குலை தாங்கிய தென்னை மரங்கள் !
அடித்திட்ட காற்றின் வேகத்தில் 
அரை நிமிட நேரம் திசை மாறிய தூறலோ 
தெளிக்கிறது சாரலாய் ...!
முகத்தில் அடித்திட்ட சாரலின் மிச்ச சொச்சங்கள் 
ரோஜா மலரில் வீற்றிருக்கும் பனித்துளி போல் 
அந்த ரோஜாவின் எழிலுருவை
 வான்மன்னன் படம் எடுக்க விழைந்தானோ!
மீண்டும் ஒரு மின்னலொளி!
வீசி மறைந்திட்ட ஒளியினிலே நான் கண்டேன் ...!
நனைந்து சிரிக்கின்ற மலரவள் யாரென்று!
சிலிர்த்துச் சிரிக்கின்ற பெண்ணவள்...
 என்னவள்தானென்று! 
...............................................................................முத்துக் குமரன் சுரேஷ்