Saturday, 8 October 2011

கமலமலரின் அழைப்பு

கமலமலரின் அழைப்பு 

பாரினில் நீயின்றேல் 
        
        படுத்துவிடும் உயிர்களெல்லாம்

பட்டினிப்போர் மூண்டுவிடும்

        பகலவனே வந்துவிடு!

கடலுமுனைக் காணாது 

       கதறிவிடும் பரிதவித்தே!

காத்திருக்க வைக்காதே

      கதிரவனே வந்துவிடு!

இரவரக்கன் பிடியினிலே 
     
     இதழ்கூம்பி நிற்கின்றேன்;

இப்பொழுதே இக்கணமே 

      இரவியோனே வந்துவிடு!

ஆட்டமிட்ட காதலனும் 

    அடங்கிவிட்டான் என்னுள்ளே!

ஆங்கிவனை சிறைமீட்க 
     
     ஆதித்யா வந்துவிடு!

சுட்டெரிக்கும் வெயில்வேண்டாம் 

      சூடான சுகம்வேண்டும் !

சுடர்முகத்துச் சூத்ரதாரி 

       சூரியனே வந்துவிடு !

                        மாணவ நண்பன் .
                                                           
    

                          





           

No comments:

Post a Comment