Monday, 25 August 2014

மயக்கும் புன்னகை



















மயக்கும் புன்னகை 

அழகாய்ச்  சிரிக்கும் அற்புதச் சிறுவன் .

நீர்வர்ணம் தனில் தூரிகை தோய்த்தே 

கை முறைத்  தாளில் களிப்புடன் வரைந்தேன் 

தங்கக் கூந்தல் முன் நெற்றியில் புரள 

நீல விழிகளில் குறும்பு மின்ன 

ரோஜாக் கன்னம் நாணம் காட்ட 

செவ்விதழ் விரிந்து முத்துகள் தெரிய

தன் அற்புதப் புன்னகை கொண்டு நம்முள்ளம் மயக்கும் 

உள்ளம்கவரும் கள்வனை வரைந்தேன்

கண்டோர் புகழ நெஞ்சு நிறைந்தேன்.
    








No comments:

Post a Comment