Sunday, 24 August 2014

நீர்க்குடம் ஏந்தும் பாற்குடம்

நீர்க்குடம் ஏந்தும் பாற்குடம்

தண்ணீர் கொண்டு செல்வதற்காக பானை சுமந்து வந்த பெண் பொய்கையிலே நீராடி முடித்த கையேடு தான் அணிந்த ஒற்றை வெண்ணிற ஆடை ஈரம் கொண்ட மேனியிலே ஒட்டியும் ஒட்டாமலும் ,பட்டும் படாமலும் அவள் மேனியழகை இலை  மறை காயாய்  மறைத்தும் மறைக்காமலும் வெளிப் படுத்தும் காட்சி... அடடா... !
ரசித்து ரசித்து வரைந்த இவ்வோவியம் ....!
அவள் காங்களில் பாருங்கள்...குறும்பின் மின்னல்...
இதழ்களில் ..ஒய்யாரக் குறுநகை....!
கன்னங்களில் வெட்கச் செந்தூரம்.....!
காமக் கண்ணோடு பாராமல் கலைக் கண்ணோடு பாருங்கள்...!
எனக்கு மட்டுமல்ல ...! 
என் தாயாருக்கும் கூட நான் கஷ்டப்பட்டு.. இல்லை... இல்லை...!
நான் இஷ்டப்பட்டு வரைந்த இவ்வோவியம் ...மிக மிக பிடிக்குமாம் ...! 

No comments:

Post a Comment