Sunday, 29 December 2013

மின்சிக்கனம்

 உலகில் உயிர்கள் நடமாட 
வேண்டும்  காற்றும் நீருமடா
அதுபோல் பொறிகள் இயங்கிடவே 
நிச்சயம் வேண்டும் மின்சாரம் .

விளக்கு எரித்திட மின்சாரம் 
உணவைச் சமைத்திட மின்சாரம் 
மருந்தைக்  காத்திட  மின்சாரம் 
அதுவே வாழ்வின் ஆதாரம் .

ரயிலை இயக்கிட  மின்சாரம் 
திரைப்படம் பார்த்திட மின்சாரம் 
ரோபோ எனுமோர் இயந்திர மனிதன் 
நடந்திட வேண்டும் மின்சாரம் .

மின்சாரத்தின் பயன் தன்னை 
சொல்லிட ஓர்நாள் போதாது 
மின்சாரம் மட்டும் இலையென்றால் 
உலகில் வாழ்வே நின்றுவிடும்.

இத்தகு பல்பயன் தருகின்ற 
மின்சாரத் தினைநீர் போல  
செலவு செய்திடல் முறையாமோ ?
சிக்கனம் செய்திடல் நன்றன்றோ ! 

 வீணாய் ஓடிடும் மின்விசிறி 
ஒளியை உமிழ்ந்திடும் மின்விளக்கு 
யாரும் காணாத் தொலைகாட்சி 
இவையனைத்தின்    இயக்கம் நிறுத்திடுவீர் 

இதுபோல் இன்னும் பலஉண்டு 
ஒவ்வொன்  றாகநீ கண்டு 
மின்சிக்  கனம்நீ செய்திட்டால் 
நாடும்வீடும் உனை வாழ்த்தும் !

No comments:

Post a Comment